திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரப்பட்டி அருகே அதிமுக நிர்வாகி முத்துச்சாமி என்பவர் ஓட்டி சென்ற கார், எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் கருப்பண்ணன், சண்முகம் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் முத்துச்சாமியை கைது செய்து, பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நிவாரணம் பெற்று தரக் கோரி உறவினர்கள் பழனி அரசு மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.