அசாம் மாநிலத்தில் மனைவி புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தில், அம்மாநில உள்துறை செயலாளர் மருத்துவமனையிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2009-ம் ஆண்டு Batch-ஐ சேர்ந்த டிஐஜி தரவரிசை ஐபிஎஸ் அதிகாரியான ஷிலாதித்யா சேத்தியா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது மனைவியைக் கவனித்துக் கொள்வதற்காக, கடந்த 4 மாதங்களாக விடுப்பில் இருந்தார்.
அவரது மனைவி கவுகாத்தியுலுள்ள மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
இந்த தகவலறிந்தும், மனைவி சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சைப் பிரிவு அறையிலேயே, ஷிலாதித்யா சேத்தியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.