இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக, ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 வயதுக்கு உட்பட்ட 464 குழந்தைகள் உயிரிழப்பதாக, அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இந்த அறிக்கையின்படி, கடந்த 2021-ம் ஆண்டு உலகம் முழுவதும் காற்று மாசுபாடு காரணமாக 81 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், அதில் நான்கில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.
மொத்தமாக, காற்று மாசுபாட்டினால் இந்தியாவில் 21 லட்சம் உயிரிழப்புகளும், சீனாவில் 23 லட்சம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
மொத்த உயிரிழப்புகளில் 55 சதவீதம் இந்த இரு நாடுகளில் மட்டும் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் உயிரிழப்புக்கான காரணங்களில் உயர் ரத்த அழுத்தம் முதலிடத்திலும், காற்று மாசு இரண்டாவது இடத்திலும் உள்ளது. நீரிழிவு கூட இதற்கு அடுத்த இடத்திலேயே உள்ளது.