2024-25 நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல், 22.19 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல நிகர நேரடி வரி வசூல் 20.99 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் முன்கூட்டியே வசூலிக்கப்பட்ட வரியானது, ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 823 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேபோல 53 ஆயிரத்து 322 கோடி ரூபாய் வரி செலுத்துபவர்களுக்கு ரீஃபண்ட் முறையில், திருப்பிச் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.