பீகார் மாநிலம் முஸாபர்பூரில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஏராளமான இளம் பெண்களை பல மாதங்களாக அடைத்து வைத்து பாலியல் சித்ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கும்பலிடம் இருந்து தப்பி வந்த பெண் ஒருவர், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், “அறையில் அடைத்து வைத்து தினமும் அடித்து உதைத்து பாலியல் சித்ரவதை செய்தனர்” என புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய 9 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.