பாவோ நுர்மி விளையாட்டு போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
பின்லாந்து நாட்டின் துர்கு நகரில் பாவோ நுர்மி விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில், ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா 85.97 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
பின்லாந்தின் டோனி கெரானென் வெள்ளி பதக்கமும், அவருடைய சக நாட்டு வீரரான ஆலிவர் ஹெலாந்தர் வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.