சீஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா துறைமுகத்தில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சுனைனா, அந்த நாட்டு போர்க் கப்பலுடன் கூட்டு பொருளாதார மண்டல கண்காணிப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அனைத்து நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக சாகர் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டில் தொடங்கியது.
இந்தத் திட்டத்தின்கீழ், சீஷெல்ஸ் நாட்டுடன் இணைந்து இந்தியா பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.