தென்கொரியாவில் மாணவர்கள் சேர்க்கைக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களை பணிக்கு திரும்பும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்கொரியாவில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த நடைமுறையை கண்டித்து அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஏராளமானோர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மருத்துவர்கள் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.