சீனாவில் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குவாங்டாங் மாகாணத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது.
மேலும் நகரம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.
அதிகபட்சமாக மெய்சூ நகர் மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும், அப்பகுதியில் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.