டெல்லியில் இருந்து பீகார் சென்ற விமானத்தில் சுமார் ஒரு மணிநேரம் ஏசி இயங்காததால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.
டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு SG 486 என்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று காலை புறப்பட்டது. ஆனால் விமானத்தில் ஏசி இயங்காததால் பயணிகள் அவதியடைந்தனர். இதுதொடர்பாக விமான சிப்பந்திகளிடம் அவர்கள் முறையிட்டனர்.
ஆனால் முறையான பதில் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது முதல் சுமார் ஒரு மணி நேரம் ஏசி இயங்கவில்லை என்றும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ரோஹன் குமார் என்ற பயணி கேட்டுக்கொண்டுள்ளார்.
















