திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சார்பில், உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதில் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் மருத்துவர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது யோகா குறித்த பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.