பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் அருகே அம்மன் கோயில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 11-ம் தேதி ஆலந்துறை அம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து ரிஷப வாகனம், சிம்ம வாகனம் மற்றும் குதிரை வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை முக்கிய சாலைகள் வழியாக வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.