திருச்சியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தண்டோரா அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது நெடுஞ்சாலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படவுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கோட்டை நோக்கி பேரணியாக சென்று முற்றுகை போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.