பாஜக கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்து திரைப்பட இயக்குநர் பாண்டிராஜன் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பினால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இயக்குநர் பாண்டிராஜனுக்கும், மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் இருக்கும் பிரச்சினையை திசை திருப்பவே, பாஜக கட்சி மற்றும் நிர்வாகிகள் குறித்து, யூடியூப் சேனலில் அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக குற்றம் சாட்டினார்.
பாஜக என்றைக்குமே குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்காது எனவும் அவர் கூறினார்.