வேலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சின்ன ஊனை கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர், விருதம்பட்டில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரது வாகனத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன், இருசக்கர வாகனத்தில் இருந்து உடனடியாக இறங்கியதையடுத்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.