கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 39 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் பாக்கெட் சாராயம் அருந்தியிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தேவையான மருத்துவ உதவிகளை வழங்க உத்தரவிட்டார்.