கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்தி 34 பேர் உயிரிழந்திருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என கூறிய அவர், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.