தமிழக சட்டப்பேரவை கூடியவுடன், மறைந்த உறுப்பினர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியவுடன் மறைந்த உறுப்பினர்கள், துபாய் தீ விபத்தில் உயிரிழந்தோர், மற்றும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் குடித்து பலியானோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. . இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி சம்பவம் அதிர்ச்சியப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பேரவை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்வதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து, பேரவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. . சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 29ஆ வரை நடைபெறவதுடன், ஜூன் 21, 22, 24 ஆகிய தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.