தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2, 2
‘‘ஏ’’ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் குரூப் 2, 2-ஏ உள்ளிட்ட தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில் குரூப் 2, 2-ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பை தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் 2 ஆயிரத்து 30 காலிபணியிடங்கள் உள்ளதாகவும் விண்ணப்பதாரர்கள் இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.