2050ம் ஆண்டுக்குள் இந்திய பங்குசந்தைகளின் மொத்த மதிப்பு 40 லட்சம் கோடியை கடக்கும் என தொழிலதிபர் கவுதம் அதானி கணித்துள்ளார்.
கிரசில் ரேட்டிங்ஸ் நிறுவனம் சார்பில் வருடாந்திர உள்கட்டமைப்பு உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்றது.
இதில் தொழிலதிபர் கவுதம் அதானி, கலந்துகொண்டு பேசினார். அப்போது சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1 லட்சம் கோடி டாலரை எட்ட 58 ஆண்டுகள் ஆனதாக தெவித்தார்.
ஆனால் தற்போது நாட்டின் வளர்ச்சி வேகம் மற்றும் பொருளாதார சீர்த்திருத்தங்களை வைத்து பார்க்கும்போது, ஜிடிபி மதிப்பு ஒவ்வொரு 12 முதல் 18 மாதங்களில் ஒரு ட்ரில்லியன் டாலர் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
இது 2050ல் 30 ட்ரில்லியன் டாலரை எட்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்திய பங்குசந்தையின் ஒட்டுமொத்த மதிப்பு வரும் 2050ல், 40 லட்சம் கோடி டாலரை கடக்கும் என்றும் அவர் கூறினார். இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற வளர்ச்சிக்கு சாத்தியமில்லை எனவும் அதானி பெருமிதம் தெரிவித்தார்.