நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே முன்னாள் தீயணைப்புத்துறை அதிகாரியின் வீட்டிலிருந்த 35 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மேட்டுத்தெருவில் வசித்து வந்த முன்னாள் தீயணைப்புத்துறை அதிகாரியான அழகேசன் என்பவர், தனது மகளுடன் சென்னைக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டுக்கு வந்த பணிப்பெண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 35 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.