டெல்லியில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் டேங்கரில் முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர்.
கோடை தொடங்கியதில் இருந்து டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் டேங்கர் மூலம் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் காலையில் டேங்கர் லாரி வந்ததும், பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க முற்பட்டனர்.
இருப்பினும், ஒரு சிலர் தண்ணீர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி ஆளும் டெல்லி அரசு உரிய தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.