ஒடிசா சட்டப் பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் சுரமா பதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில், ரன்பூர் எம்எல்ஏ சுரமா பதி சட்டப் பேரவைத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.