தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே ரயிலின் பேன்ட்ரீ எனப்படும் உணவு சமையல் கூட பெட்டியும், மற்றொரு ஏசி பெட்டியும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அதில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால், தீயணைப்பு துறையினர் வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இதில் யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.