மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் லாரி மோதியதில் இருசக்கர வாகனஓட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
குத்தாலத்தைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளர் வைத்தியலிங்கம் என்பவர், தேநீர் அருந்துவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது எதிரே வந்த பேருந்துக்கு வழிவிடுவதற்காக சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், வைத்தியலிங்கம் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவ்விபத்தில் சரக்கு வாகனமொன்றும் சேதமடைந்த நிலையில், காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.