ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்டிய ஆடம்பர பங்களாவின் ட்ரோன் வீடியோ வெளியாகியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கடற்கரை அருகே இயற்கை எழில்மிகுந்த மலைப் பகுதியில், மலையை வெட்டி எடுத்து முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில், ஆடம்பர பங்களா கட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அங்குள்ள பாத்ரூம் குழாய் மட்டுமே 40 லட்ச ரூபாய்க்கு அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வரின் அறையில் மசாஜ் டேபிள் பிரம்மாண்டமாக அமைந்திருப்பதாக தகவல் வெளியானது.
இருப்பினும், இது அரசு மாளிகைதானே தவிர, ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த பங்களா அல்ல என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில், அந்த பங்களாவின் ட்ரோன் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.