ஈரோட்டில் 9 வயது சிறுமியை சரமாரியாக தாக்கிய தாயின் இரண்டாவது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த தமிழ் செல்விக்கு, 9 வயதில் மகள் உள்ள நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக நவீன் ராஜ் என்பவருடன் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக நவீன்ராஜ் மற்றும் தமிழ்ச்செல்விக்கு இடையே குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் முகம் பார்க்கும் கண்ணாடியை 9 வயது சிறுமி நிவாஷினி உடைத்து விட்டதாக கூறி நவீன் ராஜ், சிறுமி மற்றும் தாய் தமிழ்ச்செல்வியை சரமாரி தாக்கியுள்ளார்.
காயமடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.