நெல்லை பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் அனிதா, ஊராட்சி செயலர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுவதாகக் கூறியும், நெல்லை மாவட்ட தலைவர் முத்துக்குட்டியை பணி மாறுதல் செய்வதை ரத்து செய்யக் கோரியும், தென் மாவட்டங்களை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.