சர்வதேச யோகா தினத்தன்று, யோகா மற்றும் தியானத்தின் பூமியான காஷ்மீருக்கு வந்துள்ளது தமக்கு கிடைத்த பாக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
10-வது யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சயில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார். தால் ஏரிக்ரை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமருடன் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர்.
நிகழச்சியில் பேசிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தன்று, தியானத்தின் பூமியான காஷ்மீருக்கு வரும் பாக்கியம் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
காஷ்மீர் மண்ணில் இருந்து, உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் யோகா தின வாழ்த்துக்களை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாட வேண்டும் என்று தான் முன்மொழிந்ததாகவும், இந்தியாவின் முன்மொழிவை 177 நாடுகள் ஆதரித்ததாகவும், அவர் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில், யோகாவின் விரிவாக்கம் யோகா தொடர்பான கண்ணோட்டத்தை மாற்றியுள்ளதாகவும், . தனிநபர் நல்வாழ்வு மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்பதே இந்த ஆண்டு யோகாவின் முக்கிய கருப்பொருள் என்றும் மோடி தெரிவித்தார்.