கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலுவையும், முத்துசாமியையும் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளச் சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கள்ளச்சாராய வியாபாரிகளை சங்கராபுரம் திமுக எம்எல்ஏ உதயசூரியன் பாதுகாப்பதாகவும் குற்றம்சாட்டினார்.