கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள மரணங்களுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தினார்.
மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் எல்.முருகன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் உள்ள தமது முகாம் அலுவலகம் தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்தார்.
மேலும், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் கள்ளச்சாராயம் தொடர்பாக ஏற்பட்டுள்ள தொடர் மரணங்களுக்கு பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தினார்.