வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-னுக்கு ரஷ்ய அதிபர் புதின் விலை உயர்ந்த காரை பரிசாக அளித்துள்ளார்.
வடகொரியாவில் அண்மையில் சுற்றுப்பயணம் செய்த புதின், தனது அதிகாரபூர்வ ஆரஸ் ரஷ்யன் காரில் கிம் ஜாங் உன்-னை அழைத்துச் சென்றார்.
சோவியத் காலத்தைச் சேர்ந்த இந்த ரக கார், தற்போது மறுவடிமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதிநவீன பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இந்த காரை கிம் ஜாங் உன்-னுக்கு புதின் பரிசாக அளித்துள்ளார்.