டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்தது. கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இதனிடையே அடுத்த சில நாட்களுக்கு உத்தரகாண்ட் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.