ஈரோடு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் தொடர்புடையவர்கள் வருவாய்த் துறையினரிடம் நன்னடத்தை சான்றிதழ் பெற்று வருமாறு மதுவிலக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு எதிரொலியால், ஈரோடு மதுவிலக்கு காவல்துறையினர் ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் தொடர்புடையவர்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
மேலும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவிலக்கு போலீசார் எச்சரித்தனர்.
















