கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த 48 மணி நேரம் கழிந்தும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் 50க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயுள்ளதாக குற்றம் சாட்டினார்.
திமுக அரசு தூங்கிக் கொண்டிருப்பதை கள்ளச்சாராயமரணங்கள் எடுத்துக்காட்டுகிறது எனவும் அவர் விமர்சித்தார்.