மத்திய இணை அமைச்சராக 2 வது முறை பொறுப்பேற்ற பிறகு சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கு வருகை தந்த எல்.முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்.முருகன். இவர் 2- வது முறையாக மத்திய தகவல் ஒலிப்பரப்பு மற்றும் நாடாளுமன்றங்கள் விவாகரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டநிலையில் தனது சொந்த மாவட்டமான நாமக்கல்லுக்கு வருகை தந்தார். அப்போது, நாமக்கல் மாவட்ட பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொன்னாடை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை வரவேற்றனர்.
இதனையடுத்து நாமக்கல் கோட்டை ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில் எல்.முருகன் தரிசனம் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.