டெல்லியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஆளும் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதாக கூறி, குடிநீர் வழங்கல் வாரியம் முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களைக் கலைப்பதற்காக அவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகி ஷெசாத் பூனவல்லா, டெல்லிக்கு தேவையான குடிநீரை ஹரியானா மாநிலம் வழங்குவதாகவும், இதை உச்சநீதிமன்றமே ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.