ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.
ஹரியானா மாநிலம் குருகிராம் செக்டார் 35-இல் தொழிற்சாலை வாகனம் மோதி தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கட்டுப்படுத்த முயன்றபோது திடீரென வன்முறை ஏற்பட்டது.
இதில் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்தார். ஏராளமான வாகனங்கள் கல்வீச்சில் சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியே போர்க்களம் போல காட்சியளித்தது.