கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரின் நீதிமன்றக் காவல் ஜூலை 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்த ரேணுகா சுவாமி என்பவர், நடிகர் தர்ஷனின் காதலிக்கு ஆட்சேபத்துக்குரிய குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் ரேணுகா சுவாமியை நடிகர் தர்ஷன் கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக தெரிகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தர்ஷன் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர்.
அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், ஜூலை 4-ஆம் தேதி வரை நீட்டித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.