கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இண்டியா கூட்டணி மெளனம் காப்பது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் அனில் ஆண்டனி, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இடையே நேரடி தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், திமுக அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணி தலைவர்கள், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் என்றும் அனில் ஆண்டனி கேள்வி எழுப்பியுள்ளார்.