கன்னியாகுமரி மாவட்டம் மயிலார் பகுதியில் யானை மிதித்து அரசு ரப்பர் தோட்ட தொழிலாளி உயிரிழந்தார்.
கோதையார் பகுதியை சேர்ந்த மணிகண்டன், மயிலார் பகுதியில் உள்ள அரசு ரப்பர் தோட்டத்தில் பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல தோட்டத்தில் ரப்பர் பால் வெட்ட சென்ற மணிகண்டனை காட்டு யானைக்கூட்டம் துரத்தியது.
இதனால் பயந்து ஓடியபோதும் விடாத காட்டுயானை மணிகண்டனை மிதித்துக் கொன்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.