நாட்டிலேயே முதன்முறையாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், நம்பகமான அதிவிரைவு குடியேற்ற பயணிகள் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் 3-ஆவது டெர்மினலில் இந்த சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கிவைத்தார்.
அதிவிரைவு குடியேற்ற பயணிகள் திட்டத்தின்கீழ், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களும், ஓசிஐ கார்டு வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் விமான நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை.
இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் நபர்கள் இணையவழியில் தங்களது கைரேகை மற்றும் கருவிழி படல அடையாளத்தைப் பதிவு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், சிறுவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்களுக்கு நூறு டாலரும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.