தூத்துக்குடியில், கள்ளச்சாராய மரணம் குறித்து கேள்வி எழுப்ப தயாராக இருந்த செய்தியாளர்களை சந்திக்காமல் கனிமொழி எம்.பி. அங்கிருந்து புறப்பட்டு சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சி முகாமை திமுக எம்பி கனிமொழி தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்து கொண்டு வெளியே வந்த கனிமொழியிடம், கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்த கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் தயாராகினர்.
ஆனால் முக்கிய மீட்டிங் இருப்பதாக கூறிவிட்டு, கனிமொழி காரில் ஏறி புறப்பட்டார்.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க அஞ்சியே செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றதாக விமர்சனம் எழுந்துள்ளது.