டெல்லியில் வாட்டி வதைத்த வெப்பத்தால், லட்டுகள் முழுவதும் உருகி அல்வா போல மாறின.
டெல்லியை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் பூமிகா, தான் வாங்கிய லட்டு பெட்டியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் வாங்கியபோது பெட்டியில் இருந்த லட்டுகள், வெப்ப அலையால் உருகி அல்வா போல மாறிவிட்டதாக அவர் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.