சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாளில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், பாரதிய ஜனதா கட்சிக்கான முதல் விதையாக, பாரதிய ஜன சங்கத்தை 1951-ஆம் ஆண்டில் நிறுவியவர்களில் ஒருவரான மதிப்பிற்குரிய சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களது நினைவு தினம் இன்று.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்குகிற அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ எதிர்த்து போராடியவர். தனது இறுதி மூச்சு உள்ள காலம் வரை, ஒரே தேசம் ஒரே தேசியக் கொடி என்பதையே நோக்கமாக கொண்டு வாழ்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி நினைவு நாளில், அவரது தியாகங்களைப் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.