ஒரே தேசம், ஒரே கொடி என்ற கருத்துக்காக தனது கடைசி மூச்சு வரை போராடியவர் சியாமா பிரசாத் முகர்ஜி என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய அமைச்சருமான சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களின் புண்ணிய திதியை முன்னிட்டு அவருக்கு தமிழக பாஜக சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.
ஒரே தேசம், ஒரே கொடி என்ற கருத்துக்காக தனது கடைசி மூச்சு வரை போராடிய தலைவர், நமது காரியகர்த்தாக்களுக்கு உண்மையான உத்வேகமாக இருப்பார் என அண்ணாமலை கூறியுள்ளார்.