டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் 19.2 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் முதன்முறையாக வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது குறிப்பிடதக்கது.