கள்ளச்சாராயம் உயிரிழப்புகள் ஆளுங்கட்சியின் தோல்வியை காட்டுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து டிடிவி தினகரன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியாளர்களின் கவனக்குறைவே கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டினார்.
மாவட்ட ஆட்சியரின் பேட்டியை பார்க்கும்போது ஆளுங்கட்சியின் தலையீடு அதிகரித்தது தெரியவந்துள்ளது எனக்கூறிய அவர், காவல் துறையினரின் செயல்பாடுகளை செய்யவிடாமல் தடுத்தது திமுக நிர்வாகிகள் என சாடினார். கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும் எனக்கூறிய அவர், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.