கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டவேண்டும்” என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கோவை ராம் நகர் பகுதியில் கோவை மாநகர் மாவட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்கம் அறிமுக கூட்டம் மற்றும் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், “தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ள போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம் சாட்டினார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கொடுத்துள்ள அறிக்கையை, தமிழக அரசு செயல்படுத்தக்கூடாது” என்றும அவர் கூறினார்.