நீட் முறைகேடு புகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளருக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், தாராளமான விசாரணை நடத்தலாம் என தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிந்ததாக எழுந்துள்ள புகாரில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரத்தில், முக்கிய நபரான சிக்கந்தருக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விருந்தினர் மாளிகையில் இடம் ஒதுக்குவதற்காக, தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளர் ப்ரீத்தம் குமார் அதிகாரிகளிடம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் இந்தக் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, தனது நேர்முக உதவியாளரிடம் அதிகாரிகள் தாராளமாக விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.